சிவகார்த்திகேயன் நடிப்பில் 'வேலைக்காரன்' ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு
தனி ஒருவன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன், நயன்தாரா,பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்க, மோகன் ராஜா இயக்கும் படம் 'வேலைக்காரன்'. ‘ரெமோ’ படத்தைத் தயாரித்த '24 AM STUDIOS' ராஜாதான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
சமீபத்தில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது. இதையடுத்து, வருகின்ற செப்டம்பர் 29-ம் தேதி படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட உள்ளதாக, படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மாலை 6 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியாக இருக்கிறது. அடுத்தடுத்து டீசர், ட்ரெய்லர் மற்றும் இசையையும் விரைவில் வெளியிட இருக்கிறார்களாம்.
Comments
Post a Comment