இந்த கைப்பையின் விலை என்ன தெரியுமா? வரலாறு படைத்த விற்பனை

இந்த கைப்பையின் விலை என்ன தெரியுமா? வரலாறு படைத்த விற்பனை

ஹோங்கோங் நாட்டில் பெண்கள் பயன்படுத்தும் கைப்பை ஒன்று 3,77,000 டொலர் விலைக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹோங்கோங்கில் விலைமதிப்பற்ற ஆபரணங்கள் மற்றும் பொருட்களை Christieஎன்ற நிறுவனம் நேற்று ஏலத்தில் விட்டுள்ளது.
இந்த ஏலத்தில் 18 காரட் வைரம் மற்றும் சுத்தமான தங்கத்தால் தயாரிக்கப்பட்ட Birkin 30 என்ற கைப்பையும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கைப்பையை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவியதில் 15 நிமிடங்கள் பெயர் வெளியிடப்படாத தொழிலதிபர் ஒருவர் இக்கைப்பையை 3,77,000 டொலருக்கு வாங்கியுள்ளார்.
ஏலத்தில் மிக அதிகளவில் விற்பனை ஆன கைப்பை இதுவென்பது குறிப்பிடத்தக்கது

Comments