ரஜினிக்கு பிறகு அஜித் மட்டுமே படைத்த சாதனை
இந்திய சினிமாவை பொறுத்தவரை சல்மான் கான், ஷாருக்கான் போன்ற பாலிவுட் நடிகர்களுக்கு சவால் விடுபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த கபாலி ஏற்படுத்திய அதிர்வலைகளை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் கபாலி டீசர் யு-டியூபில் 3 கோடி ஹிட்ஸை கடந்தது, அதுமட்டுமின்றி 4 லட்சம் லைக்ஸுகளை பெற்று சாதனை படைத்தது.
இதை தொடர்ந்து கடந்த மாதம் வெளிவந்த விவேகம் டீசர் தற்போது பிரமாண்ட சாதனை ஒன்றை படைத்துள்ளது, இந்த டீசரை தற்போது வரை 14 மில்லியனுக்கு மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
மேலும், இந்த டீசரை 4 லட்சம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர், இதன் மூலம் தமிழகத்தில் ரஜினிக்கு பிறகு ஒரு டீசரில் அதிக லைக்ஸ் வாங்கியது அஜித் தான்
Comments
Post a Comment