பாலிவுட்டில் அறிமுகமாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

பாலிவுட்டில் அறிமுகமாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

தென்னிந்திய படங்கள் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்த பிறகு பாலிவுட்டிலேயே செட்டிலாகிவிட்டார். இப்போது மாம் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூரும் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக நீண்டகாலமாகவே செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இப்போது அவர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர், மராத்திய படமான சாய்ரட்-ஐ, ஹிந்தியில் ரீ-மேக் செய்ய உள்ளார். இதில் ஹீரோவாக சாகித் கபூரின் சகோதரர் இஷான் நடிக்க, அவருக்கு ஜோடியாக ஜான்வி நடிக்க உள்ளார். சாசாங் கைத்தான் இயக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

Comments