லண்டன் படப்பிடிப்பில் டாப்சி-ஜாக்குலின் மோதல்..!
இரண்டு ஹீரோயின்களை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் ஆகட்டும், இல்லை அவர்களை வைத்து படம் இயக்கும் இயக்குனர் ஆகட்டும்.. பெரும்பாலும் எந்நேரமும் திக் திக்கென்றே படப்பிடிப்பை நடத்த வேண்டி இருக்கும்.. அப்படி ஒரு அனுபவத்தைத்தான் சந்தித்துள்ளனர் தற்போது வருண் தவானை வைத்து 'ஜூட்வா-2' என்கிற படத்தை தயாரித்து வரும் படக்குழுவினரும். இந்தப்படத்தில் கதாநாயகிகளாக டாப்ஸியும், ஜாக்குலின் பெர்னாண்டசும் நடிக்கின்றனர்.. படத்தில் யாருடைய கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்தது என இருவரிடமும் சொல்லப்படவில்லை..
இந்நிலையில் லண்டனில் நடைபெற்ற இந்தப்படத்தின் படப்பிடிப்பில் இரண்டு நடிகைகளுக்கும் யார் பெரியவர் என்கிற ஈகோ யுத்தம் வெடித்ததாம்... இரு நடிகைகளின் உடன் வந்தவர்களும் பிரச்சனையை ஊதி பெரிதாக்கவே முயற்சித்தார்களாம். எப்படியோ ஒருவழியாக சமாளித்து படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள்.. இத்தனைக்கும் டாப்ஸி, ஜாக்குலின் இருவருக்குமே கடைசியாக நடித்த அவர்களது இரண்டு படங்களும் சரியாக ஓடவில்லை.. அந்தவகையில் இருவருமே சமம் தான்.. அப்புறம் ஏன் ஈகோ யுத்தம் என புரியாமல் குழம்பி போனார்களாம் படக்குழுவினர்.
Comments
Post a Comment