வில்லன்' பட ஷூட்டிங்கில் இணைந்தார் ஹன்சிகா..

வில்லன்' பட ஷூட்டிங்கில் இணைந்தார் ஹன்சிகா..!

தமிழில் ஹன்சிகாவின் அலை ஓய்ந்துவிட்டது போலத்தான் இருக்கிறது. கிட்டத்தட்ட முன்னணி நடிகர்கள் ஹன்சிகாவை ஒதுக்கிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும், இயக்குனர்களும் கூடத்தான். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மொழிக்கு ஒன்றாக மூன்று படங்கள் மட்டுமே கைவசம் வைத்திருக்கிறார் ஹன்சிகா. இதில் தமிழில் பிரதேவாவுடன் 'குலேபகாபவலி' மற்றும் தெலுங்கில் கோபிசந்த்துடன் ஜோடியாக 'கௌதம் நந்தா' ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்துக்கொடுத்து விட்டாராம் ஹன்சிகா.
இப்போது ஜூன்-1ஆம் தேதி முதல் மலையாளத்தில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் 'வில்லன்' பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் ஹன்சிகா. இது மலையாளத்தில் ஹன்சிகாவுக்கு முதல் படமாகும். அதுமட்டுமல்ல இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் விஷாலுக்கும், மலையாளத்தில் இதுதான் முதல் என்ட்ரி. இதில் ஹன்சிகாவின் கேரக்டரும் விஷாலின் கேரக்டரும் சஸ்பென்சாகவே வைத்துள்ளார்கள். மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் இயக்கும் இந்தப்படம் வரும் ஜூலை-21ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

Comments