விமானத்தில் கடத்தப்பட்ட பயங்கர ஆயுதங்கள் பயங்கரவாதிகள் செயலா?

விமானத்தில் கடத்தப்பட்ட பயங்கர ஆயுதங்கள் பயங்கரவாதிகள் செயலா?

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் வந்திறங்கிய விமானம் ஒன்றில் மறைத்துவைத்து கடத்தப்பட்ட ஏ.கே 47 வகை துப்பாக்கிகளை அங்குள்ள பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அமெரிக்காவின் மியாமி நகரில் இருந்து பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவுக்கு சரக்கு விமானம் ஒன்று சென்றுள்ளது. அதில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நீச்சல் குளத்துக்கு பயன்படுத்தும் பொருட்கள் இருந்துள்ளன.
இதனையடுத்து சோதனையிட்ட பிரேசில் பொலிசார், அந்த பொருட்களின் அடியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 60 எண்ணிக்கையிலான ஏ.கே.45 மற்றும் 47 வகை துப்பாக்கிகள் கண்டெடுத்துள்ளனர்.

இதனையடுத்து மொத்த துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்த பொலிசார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு மிகப்பெரிய அளவிலான கடத்தல் பொருட்களை பிரேசில் பொலிசார் பறிமுதல் செய்தது இல்லை என கூறப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆயுதங்கள் அனைத்தும் ராணுவத்தின் பயன்பாட்டுக்கு அனுப்பப்படும் பொருட்கள் எனவும் கூறப்படுகிறது.
மறைத்து வைக்கப்பட்டு விமானத்தில் கடத்தி வரப்பட்ட துப்பாக்கி குவியல்களை ஸ்கேன் செய்த பின்னரே பொலிசாரும் விமான நிலைய சிறப்பு அதிகாரிகளும் கண்டுபிடித்துள்ளனர்.
இதனிடையே இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக 4 நபர்களை கைது செய்துள்ள பொலிசார் மியாமி நகரில் இருந்து குறித்த பொருட்களை அனுப்பிய நபரிடம் விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ஆயுதங்களின் மதிப்பு 4.2 மில்லியன் டொலர்கள் என கூறப்படுகிறது

Comments