நவாஸ் ஷெரீஃபை நலம் விசாரித்த மோடி...!
ஆறு நாடுகள் பங்கேற்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கஜகஸ்தானில் நடைபெறுகிறது. மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் அமைதியை நிலைநாட்ட, இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய ஆறு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தக் கூட்டமைப்பில், இந்தியாவும் பாகிஸ்தானும் முழு உறுப்பினர்களாக இணையவுள்ளனர்.
தீவிரவாதத்துக்கு எதிராக, இந்த ஆறு நாடுகள்கொண்ட கூட்டமைப்பில் இந்தியாவும் இணைந்து செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக, நேற்று கஜகஸ்தான் சென்றார். அதேபோல, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் கஜகஸ்தான் சென்றுள்ளார்.
அப்போது அங்கு சந்தித்துக் கொண்ட இருவரும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்தனர். இந்நிலையில், அண்மையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நவாஸிடம், அவரது உடல் நிலை குறித்து மோடி நலம் விசாரித்தார். மேலும், நவாஸின் தயார் குறித்தும் மோடி விசாரித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இரு நாடுகளிக்கிடையே விரிவான பேச்சுவார்த்தை நடைபெறாது என்று இந்திய வெளியுறவுத்துறை வட்டராங்கள் தெரிவிக்கின்றன.
Comments
Post a Comment