குயின் ரீமேக்கில் எமி ஜாக்சன்
இதுவரை ஷங்கரின் 2.0 படத்தில் பிஸியாக இருந்த நடிகை எமி ஜாக்சன் தற்போது மற்ற படங்கள் ஒப்புக்கொள்ள தொடங்கியுள்ளார்.
பாலிவுட்டில் கங்கனா ரணாவத் நடித்து சூப்பர்ஹிட்டான குயின் படத்தின் கன்னட ரீமேக்கில் ஒரு முக்கிய ரோலில் எமி ஜாக்சன் நடிக்கவுள்ளார்.
கங்கனா ரணாவத் நடித்த கதாபாத்திரத்தில் பருள் யாதவ் நடிக்கிறார். பட்டர்பிளை என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை நடிகரும், இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்கவுள்ளார்.
இந்த படத்திற்கான ஷூட்டிங் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. லண்டனில் நடைபெறவுள்ள ஷூட்டிங்கில் எமி கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.
Comments
Post a Comment