தென் சீனக் கடல் விவகாரத்தில் சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

தென் சீனக் கடல் விவகாரத்தில் சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

தென் சீனக் கடலில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுகளை சீனா ராணுவமயமாக்குவதை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது என்று அந்நாட்டு பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மேதிஸ் எச்சரித்திருக்கிறார். சீனாவின் இத்தகைய நடவடிக்கைகள் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு கேடு விளைவிக்கும் என்று சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் தெரிவித்திருக்கிறார். கடல் வள ஆதாரம் அதிகமாக இருக்கின்ற தென் சீனக் கடலை தங்களுடையது என்று சீனா உரிமை கொண்டாடுவதை போல, பல்வேறு நாடுகளும் அப்பகுதி தங்களுடையது என்று உரிமை பாராட்டி வருகின்றன.
அதேவேளையில், வட கொரியாவின் ஏவுகணை மற்றும் ஆணு ஆயுத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சீனா மேற்கொண்டு வரும் முயற்சிகளை ஜெனரல் மேதிஸ் புகழ்ந்து பேசியுள்ளார். தென் சீனக் கடல் உரிமைகளை விட்டு கொடுக்க போவதில்லை - சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் பயணித்த அமெரிக்க அமெரிக்கா மற்றும் சீனா மேற்கொண்ட பல வார பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் வந்துள்ள இந்த தடைகள், எல்லா நாடுகளின் ஒருமித்த ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் ஷாங்கரில்லா பாதுகாப்பு பேச்சுவார்த்தை மன்றத்தில் ஜெனரல் மேதிஸ் பேசுகையில், "செயற்கை தீவுகள் மீது அதிக உரிமைகள் இருப்பதாக தெரிவித்து, ராணுவமயமாக்குவதை நாங்கள் எதிர்க்கிறோம்" என்று தெரிவித்தார்.
"தற்போது இருக்கின்ற தீவுகளில், தன்னிச்சையாக, வலுக்கட்டாயமாக மாற்றங்கள் கொண்டு வருவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று அவர் கூறினார்.
தென் சீனக் கடலில் கூட்டு ராணுவ பயிற்சி இடைநிறுத்தம்:
அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த ரொட்ரிகோ அமெரிக்க-சீன அதிபர்கள் தொலைபேசி உரையாடல்; தென் சீன கடலில் பரபரப்பு
"ஒரு முக்கிய கடல்வழி பாதையாக இருக்கின்ற தென் சீனக் கடலில் தங்களுடைய நலன்களை பாதுகாப்போம்" என்று அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பும், அந்நாட்டின் பிற மூத்த அதிகாரிகளும் தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் நியமிக்கப்பட்டபோது, "செயற்கையாக தீவுகளை உருவாக்குவதை நிறுத்துவதற்கு சீனாவுக்கு அமெரிக்கா தெளிவான சமிக்கையை முதலில் அனுப்ப போவதாகவும், இரண்டாவதாக அத்தகைய தீவுகளில் சீனா அணுகுவதற்கு தேவையான அனுமதி முற்றிலும் மறுக்கப்படும்" எனவும் அமெரிக்க உள்துறை அமைச்சர் ரெக்ஸ் தில்லர்சன் எச்சரித்திருந்தார்.
ஷாங்கரில்லா பாதுகாப்பு பேச்சுவார்த்தை மன்றத்தில் ஜெனரல் மேதிஸ் உரை - அதற்கு பதிலளிக்கும் விதத்தில், "தங்களுடைய உரிமைகளை பாதுகாத்து கொள்வதில் சீனா உறுதியாக இருக்கும்" என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்த நாடுகளுக்கு இடையில் போட்டி நடைபெறும் நிலையில், மோதல் தவிர்க்க முடியாமல் போய்விடாது என்று கூறி அமெரிக்க-சீன உறவுகளில் நேர்முக குறிப்பொன்றையும் ஜெனரல் மேதிஸ் சிங்கப்பூரில் தெரிவித்திருக்கிறார்.

Comments