சங்கமித்ரா படக்குழுவினருக்கு ஸ்ருதிஹாசன் வாழ்த்து!

சங்கமித்ரா படக்குழுவினருக்கு ஸ்ருதிஹாசன் வாழ்த்து!

தமிழ் சினிமாவில் அதிக பொருள்செலவில் எடுக்கப்படும் 'சங்கமித்ரா' படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிறிது நாள்களுக்கு முன்பு 'சங்கமித்ரா' திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இந்தப் படத்திலிருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் ஸ்ருதிஹாசன் விலகுவதாக தன் ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டது.

இந்தப் படத்திலிருந்து விலகியது ஏன் என்பது பற்றி ஸ்ருதிஹாசன் தற்போது கூறியுள்ளார். "எனக்கு இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் கேரக்டரிலிருந்து ஒரு தெளிவான புரிதல் கிடைக்கவில்லை. அதனால் என் அடுத்த புராஜெக்டிற்கு சென்றுவிட்டேன். இருந்தாலும், சங்கமித்ரா படக்குழுவினருக்கு அனைத்தும் ஈடேற என் வாழ்த்துகள். கண்டிப்பாக எல்லாம் சிறப்பாக நடக்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Comments