வேகமாக வளரும் நாடு இந்தியா ரஷ்யாவில் பிரதமர் மோடி பேச்சு

வேகமாக வளரும் நாடு இந்தியா ரஷ்யாவில் பிரதமர் மோடி பேச்சு

அனைத்து மதிப்பீட்டு நிறுவனங்களும் ஒரே குரலில் இந்தியாவை வளரும் நாடு என தெரிவித்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் சர்வதேச பொருளாதார மாநாட்டில் பிரதமர் பேசியதாவது: இந்தியா - ரஷ்யா இடையிலான உறவு நம்பிக்கை அடிப்படையில் அமைந்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி நடந்துள்ளது. டிஜிட்டல் இந்தியா பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் 35 வயதுக்கு கீழ் 8.5 கோடி இளைஞர்கள் உள்ளனர்.
இந்தியாவில் 30 வருடங்களுக்கு பின் நிலையான அரசு அமைந்துள்ளது. அரசியல் நம்பிக்கை, ஸ்திரத்தன்மை மற்றும் தெளிவான பார்வை ஆகியவை சீர்திருத்தத்திற்கு முக்கியமானதாக உள்ளது. கடந்த 3 வருடங்களில் இந்தியாவில் எளிதாக தொழில் துவங்க 7,000 புதிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. காலத்திற்கு ஏற்ப 1200 பழைய சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. அனைத்து மதிப்பீட்டு நிறுவவனங்களும் ஒரே குரலில் இந்தியாவை வேகமாக வளரும் நாடு என கூறியுள்ளன. ஜிஎஸ்டி வரும் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments