பாகிஸ்தான் புண்ணியத்தில் கிரிக்கெட் கடவுளை சந்தித்த தனுஷ்
நேற்று இங்கிலாந்து நாட்டின் எட்க்பாஸ்டன் மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி வழக்கம்போல் பாகிஸ்தானை பந்தாடி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
dhanush sachin" width="600" />
இந்த நிலையில் இந்த போட்டியை நேரடியாக பார்க்க பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் இங்கிலாந்து சென்றிருந்தனர். அவர்களில் ஒருவர் தனுஷ். அதே நேரத்தில் இந்திய வீரர்களை ஊக்கப்படுத்த கிரிக்கெட் கடவுள் சச்சின் தெண்டுல்கரும் சென்றிருந்தார்.
இந்த போட்டியின் இடையில் மழை குறுக்கிட்டபோது நடிகர்கள், மற்றும் பிரபலங்கள் சச்சினை சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்டனர். அப்போது தனுஷும் சச்சினுடன் புகைப்படம் எடுத்து அதை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஒரே ஒரு கிரிக்கெட் கடவுளான சச்சினுனுடன் புகைப்படம் எடுத்து கொண்டது பெருமைக்குரியதாக கருதுகிறேன் என்றூ அவர் பதிவு செய்துள்ளார்
Comments
Post a Comment