அடுத்தடுத்து ஏவுகணை சோதனை... மீண்டும் அதிரவைத்த வடகொரியா!
தொடர் ஏவுகணைச் சோதனை, அணு ஆயுதச் சோதனை என உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையிலேயே வடகொரியாவின் செயல்கள் உள்ளன. சர்வதேச அளவிலும், ஐநா-வின் மூலமாகவும் பல எச்சரிக்கைகள் கொடுத்த பின்னரும் தன் நிலைப்பாட்டை இதுவரையிலும் வடகொரியா மாற்றிக்கொள்ளவே இல்லை.
இதற்கு அமெரிக்கா உள்பட உலக நாடுகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. தன்னுடைய ராணுவத்தின் அதிநவீன போர் விமானங்களையும், ஜெட் ரக விமானங்களையும் சாகச நிகழ்வு நடந்தது. இதை அந்நாட்டு அதிபர் 'கிம் ஜாங் உன்' கண்டு ரசிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின.
இந்நிலையில் வடகொரியா நான்கு கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை சோதனை செய்து பார்த்துள்ளது. இந்த ஏவுகணைகள் 200 கி.மீ. தொலைவுக்கு பறந்து கடலில் விழுந்தன. இந்த ஏவுகணைகள் தரையில் இருந்து புறப்பட்டு சென்று கடலில் எதிரியின் கப்பலை குறிவைத்து தாக்கும் வல்லமை படைத்தவை என கூறப்படுகிறது. இதற்கு அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளன.
Comments
Post a Comment