இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை அதிர்ச்சியாக்கிய அறிமுக நடிகை!
ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள ரங்கூன் படத்தில் கவுதம் கார்த்திக், சனா முக்புல் நடித்துள்ளனர். படத்தை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சனா முக்புல் நடிகை சிம்ரனை நினைவுபடுத்துவதாக உள்ளார் என தெரிவித்தனர்.
ஆனால், நடிகையோ சிம்ரன் யார் என்று கேட்டு இயக்குனர் மற்றும் தயாரிபாளரை அதிர்ச்சி அடைய செய்துள்ளார். ரங்கூன் படத்தில் வளர்ந்து வரும் பாடகி நடாஷாவாக நடித்துள்ளார் சனா பக்புல்.
இது குறித்து அவர் கூறியதாவது, நான் சிம்ரனை நினைவூட்டுவதாக முருகதாஸ் தெரிவித்தார். இயக்குனரும் இதையே தான் தெரிவித்தார்.
எனக்கு சிம்ரன் பற்றி தெரியாது. பின்னர் அவரை பற்றி மற்றவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment