ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு இந்திய வீரர்கள் குழு சாதனை
உலகின் மிக உயரமான சிகரமான 8,848 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்டில் இதுவரை 4000க்கும் மேற்பட்டவர்கள் ஏறி சாதனை படைத்துள்ளனர். இதில் தனிநபர்களாக 187 பேர் இந்த சிகரத்தில் ஆக்சிஜன் உதவியின்றி ஏறியுள்ளனர். இந்த நிலையில் சுவாசிக்க தேவையான ஆக்சிஜன் உதவியின்றி இந்திய ராணுவத்தை சேர்ந்த 4 பேர் குழு இந்த சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளது. குஞ்சோ டென்டா, கெல்ஜங் டோர்ஜி பூட்டியா, கெல்டன் பஞ்சூர், சோனம் புன்ஸ்சோக் ஆகிய 4 பேர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இது தொடர்பாக ஸ்னோ லைன் எவரெஸ்ட் பயணக்குழுவின் தலைவர் விஷால் துபே கூறுகையில், ‘‘ஆக்சிஜன் உதவியின்றி எவரெஸ்ட் சிகரத்தில் ஏற குழு ஒன்றை அமைத்தோம். இதில் 4 பேர் ஆக்சிஜன் உதவியின்றி சிகரத்தை தொட்டோம். சுவாசிக்க தேவையான ஆக்சிஜன் உதவியின்றி எவரெஸ்டை அடைந்த முதல் குழு என்ற பெருமை எங்களை சேரும்’’ என்றார்.
Comments
Post a Comment