ஆஸ்திரேலியால் துப்பாக்கி விஜய் ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்

ஆஸ்திரேலியால் துப்பாக்கி விஜய் ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்

விஜய்யின் ஒவ்வொரு பிறந்த நாளையும் தமிழ்நாடு, கேரளாவில் உள்ள அவரது ரசிகர்கள் படுவிமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். அன்றைய தினம் விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்களை தியேட்டர்களில் திரையிட்டு பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள். அதேபோல் வருகிற ஜூன் 22-ந்தேதி விஜய்யின் பிறந்த நாள் என்பதால் இந்த பிறந்த நாளிலும் விஜய்யின் சூப்பர் ஹிட் படங்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள சில தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் சார்பில் திரையிடப்பட உள்ளது.
அதோடு தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61-வது படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் அன்று வெளியாகிறது. இதனால் விஜய்யின் இந்த ஆண்டு பிறந்த நாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று வருகின்றனர். மேலும், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள விஜய் ரசிகர்களும் அவரது பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்டிருக்கிறார்கள். முக்கியமாக, விஜய்யின் துப்பாக்கி படம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ஒரு தியேட்டரில் திரையிடப்பட உள்ளது. இதுகுறித்த போஸ்டர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

Comments