பெயரிலேயே உருவாகும் படத்தில் மஞ்சு வாரியர்.....
என்னதான் மோகன்லால் மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டார் ஆக இருந்தாலும் அவரது பெயரை டைட்டிலாக வைத்து இதுநாள்வரை ஒரு படம் கூட வெளியானதில்லை. அந்தக்குறை தீரும் விதமாக இப்போது ஒரு படத்திற்கு மோகன்லால் என டைட்டில் வைத்துள்ளார்கள்.. கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹிம்' என்கிற படத்தை இயக்கிய சாஜித் யாஹியா என்பவர்தான் இந்தப்படத்தை இயக்குகிறார். .
இதில் ஆச்சர்யமான விஷயமாக மோகன்லாலின் ரசிகை ஒருவரை பற்றிய வாழக்கையைத்தான் படமாக்கியுள்ளார்கள்.. மோகன்லாலின் தீவிர ரசிகையாக நடித்திருக்கிறார் மஞ்சு வாரியர். கதைப்படி, மஞ்சு வாரியர் மருத்துவமனையில் பிறந்த நாளில் தான் மோகன்லால் சினிமாவில் அறிமுகமான 'மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' படம் வெளியாகுமாம். அவருடைய வாழ்க்கையில் தனது படங்களின் மூலம் மோகன்லால் ஒரு ஆலோசகராகவே மஞ்சு வாரியருக்கு இருப்பாராம்.. இதனாலேயே படத்திற்கு 'மோகன்லால்' என டைட்டில் வைத்துள்ளார்களாம். மேலும் இந்தப்படத்தில் நடிகர் இந்திரஜித் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்
Comments
Post a Comment