காஷ்மீரில் மீண்டும் இயக்கப்பட்ட் இணையதளச் சேவைகள்!

காஷ்மீரில் மீண்டும் இயக்கப்பட்ட் இணையதளச் சேவைகள்!

காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்ட இணையதளச் சேவைகள், மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

காஷ்மீரில், கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவருகிறது. ஹுஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி கொல்லப்பட்டது முதலே, காஷ்மீரில் கல் வீச்சுச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. இதனிடையே, பாகிஸ்தான் பயங்கரவாதத் தாக்குதலும், அதற்கு இந்திய ராணுவத்தினர் எதிர்த்துத் தாக்குவதும் காஷ்மீரில் வாடிக்கையாகிவருகிறது.
இந்நிலையில், கடந்த 27-ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் கமாண்டர் சப்சர் அஹ்மத் பட் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, காஷ்மீரில் தேவையில்லாத பதற்றத்தைத் தவிர்க்கவும் சமூக வலைதளங்கள்மூலம் வதந்திகள் பரவாமல் இருக்கவும் இணையதளச் சேவைகள் முடக்கப்பட்டன. இதனிடையே, தற்போது மீண்டும் இணையதளச் சேவைகளை அனுமதித்துள்ளது மாநில அரசு. கடந்த மே 11 ஆம் தேதி இணையதளச் சேவைகள் முடக்கப்படுவதை நீக்க, ஐ.நா. சபை அதிகாரிகள் இந்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments