டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளிவருகிறது நினைத்ததை முடிப்பவன்
1975ம் ஆண்டு வெளிவந்த படம் நினைத்ததை முடிப்பவன். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், லதா, நம்பியார், மஞ்சுளா, சாரதா, தேங்காய் சீனிவாசன் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். ப.நீலகண்டன் இயக்கி இருந்தார். ஓரியண்டல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இரண்டு வேடங்களில் நடித்து சூப்பர் ஹிட்டான படம். பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த..., கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்...., ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து..., உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களை கொண்ட படம். இந்தப் படத்தை தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மேம்படுத்தி, 7.1 சவுண்ட் டிராக்கில், சினிமாஸ்கோபம் வடிவில் வெளியிட இருக்கிறார்கள். குவாலிட்டி சினிமா நிறுவனத்தின் சார்பில் பி.மணி, பி.கே.கிருஷ்ணகுமார் ஆகியோர் இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
Comments
Post a Comment