குள்ள மனிதராக நடிக்கிறார் ஷாருக்கான்
ஆனந்த் எல் ராய் அடுத்து இயக்கும் படத்தில் நடிகர் ஷாருக்கான் குள்ள மனிதராக நடிக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில், படத்தில் அவரது கேரக்டர் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதனை ஷாருக்கானே வெளியிட்டுள்ளார்.
தனது கேரக்டர் குறித்து ஷாருக்கான் கூறுகையில், நான் மூன்றரை அடி உயரமுள்ள குற்றமனிதனாக இப்படத்தில் நடிக்கிறேன். மாற்று திறனாளிகளை கவுரவிப்பதற்காகவும், அவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் இப்படத்தை எடுக்கிறோம். அதுவே இப்படத்தை எடுப்பதற்கான நோக்கம். சாதாரண மனிதர்களை விட அவர்களின் வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது என தெரிவித்துள்ளார்.
பெயரிடப்படாத இப்படத்தை ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். ஷாருக்கானும், ஆனந்த் எல் ராயுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். இப்படத்தில் கத்ரினா கைப், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இப்படம் 2018 ம் ஆண்டு கிறிஸ்துமசிற்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
Comments
Post a Comment