இந்திய தூதரகத்தில் விழுந்த ராக்கெட் குண்டு

இந்திய தூதரகத்தில் விழுந்த ராக்கெட் குண்டு!

காபூலில் இந்திய தூதரகத்தில் இன்று ராக்கெட் குண்டு ஒன்று விழுந்துள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மை காலங்களில் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ரம்ஜான் பண்டிகை மாதத்தின்போது கடந்த ஆண்டும் ஆப்கானிஸ்தானில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதனிடையே சில தினகளுக்கு முன்னர் காபூலில், இந்திய தூதரகம் அமைந்திருந்த பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 80 பேர் பலியாகினர்.
இந்நிலையில் இன்று இந்திய தூதரக வளாகத்தில் ராக்கெட் குண்டு வந்து விழுந்துள்ளது. காலை 11 மணியளவில் தூதரக வளாகத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் இந்த குண்டு விழுந்துள்ளது. இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டு தூதரகங்களும் அமைந்திருக்கும் பகுதியில் இந்த குண்டு விழுந்திருப்பது காபூலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments