தமிழில் வெளிவருகிறது ஸ்பைடர்மேன்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள ஸ்பைடர் படம் வெளிவர இருக்கும் சூழ்நிலையில் ஒரிஜினல் ஸ்பைடர்மேன் திரைப்படமும் வெளிவருகிறது. 1977ம் ஆண்டு முதல் ஸ்பைடர் மேன் படம் வெளிவந்தது. அதன்பிறகு தொழில்நுட்பம் வளர, 2002-ம் ஆண்டு முதல் ஸ்பைடர் மேன் வெளிவந்தது. இதன் மகத்தான வெற்றிக்குப் பிறகு பல பாகங்கள் வெளிவந்தன.
இப்போது ஸ்பைடர்மேன் ஹோம் கமிங் படம் வெளிவருகிறது. இதனை ஜான் வாட்ஸ் இயக்கி உள்ளார். கொலம்பியா பிக்சர்ஸ், மார்வெல் ஸ்டூடியோ இணைந்து தயாரித்துள்ளது. டாம் ஹோலண்ட், மைக்கேல் கெத்தான், ஜான் பிவரேவ், சென்டியா, டொனால் க்ளவர் உள்பட பலர் நடித்துள்ளனர். மைக்கேல் கிச்சினோ இசை அமைத்துள்ளார், செல்வட்டோர் டிட்டினோ ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் வருகிற 28ந் தேதி அமெரிக்காவில் வெளியாகிறது. அடுத்த மாதம் ஜூலை 7-ந் தேதி உலகம் முழுவதும் வெளிவருகிறது. எஸ்.பி.ஈ பிலிம்ஸ் நிறுவனம் இந்தியாவில் படத்தை வெளியிடுகிறது. இந்தி, தெலுங்கு, தமிழ் மொழியில் டப் செய்யப்படுகிறது. 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டி தொழில்நுட்பத்திலும் வெளிவருகிறது.
Comments
Post a Comment