விவேகம் ஆடியோ ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விலை போனதா?
விவேகம் படம் எப்போதும் வரும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தற்போது இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது, அதுவும் இதுவரை வந்த அஜித் படங்களின் ஆல்பங்களிலேயே இது தான் அதிகமாம்.
சுமார் ரூ 2.6 கோடி வரை இந்த ஆடியோ ரைட்ஸ் விலைக்கு சென்றதாக கூறப்படுகின்றது, மேலும், அஜித்தின் படங்களில் 6வது முறையாக சோனி நிறுவனம் விவேகம் படத்தை கைப்பற்றியுள்ளது.
இதற்கு முன் மங்காத்தா, பில்லா-2, ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளத்தை தொடர்ந்து விவேகம் படத்தின் ஆல்பத்தை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது
Comments
Post a Comment