ஸ்ருதி விலகியதை அடுத்து சங்கமித்ராவில் ராணியாக நயன்தாரா?
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் ரூ.400 கோடி செலவில் உருவாகும் படம் சங்கமித்ரா. இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா நடிக்கின்றனர். ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த படத்திற்காக ஸ்ருதி வாள் பயிற்சி, குதிரையேற்றம் உள்ளிட்ட பயிற்சி எடுத்து வந்தார். மேலும் படத்தின் அறிமுக விழா கேன்ஸ் திரைப்பட விழாவில் நடைபெற்றது. இதில் ஸ்ருதிஹாசனும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் திடீரென ஸ்ருதிஹாசன் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஸ்ருதி விலகியதை அடுத்து ஹீரோயின்கள் தேடுதல் வேட்டையில் இயக்குநர் சுந்தர்.சி தீவிரமாக ஈடுபட்டார். பாகுபலியில் நடித்த அனுஷ்கா, ஹன்சிகா பெயர் பரிசீலனையில் இருந்தது. இந்நிலையில் அதில் நயன்தாரா பெயரும் இடம் பெற்றுள்ளதாக சுந்தர்.சி தரப்பு தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment