மரகத நாணயம் மீண்டும் தள்ளி வைக்கப்படுமா

மரகத நாணயம் மீண்டும் தள்ளி வைக்கப்படுமா?

'உறுமீன்' படத்தை தயாரித்த 'ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனம் தயாரித்துள்ள படம் 'மரகதநாணயம்'. ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், முனிஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கியுள்ளார்.
சந்ஷோஷ் நாராயணனிடம் உதவியாளராக பணிபுரிந்த திபு நினான் தாமஸ் இசை அமைத்துள்ளார். பல மாதங்களுக்கு முன்பே ஃபர்ஸ்ட்காப்பி ரெடியாகி விட்டநிலையில் மரகத நாணயம் படம் பிசினஸ் ஆகவில்லை.எனவே தானே ரிலீஸ் செய்ய முடிவு செய்தார் தயாரிப்பாளர்.ஆனால் தியேட்டர்கள் கிடைக்கவில்லை.
கடைசியாக இந்த படத்தை இம்மாதம் 9-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். சத்ரியன், ரங்கூன் படங்கள் வெளியானதால் மரகத நாணயம் படத்துக்கு 75 தியேட்டர்கள் கூட கிடைக்கவில்லை. எனவே, படத்தின் ரிலீஸ் தேதியை கடைசி நேரத்தில் மாற்றிவிட்டனர்.
இந்த வார ரிலீசிலிருந்து பின் வாங்கிய 'மரகதநாணயம்' அடுத்தவார வெளியீடாக ஜூன் 16-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. மோகன்லாலின் 'புலிமுருகன்', கலையரசன் தன்ஷிகா இணைந்து நடித்துள்ள 'உரு', புதுமுகங்கள் நடித்துள்ள 'கில்லி பம்பரம் கோலி' ஆகிய படங்களும் ஜூன் 16- ஆம் தேதி வெளியாக உள்ளன. எனவே மீண்டும் மரகத நாணயம் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகவே தோன்றுகிறது.

Comments