ஆஃபர் மேல் ஆஃபர் வழங்க ஜியோ திட்டம்

ஆஃபர் மேல் ஆஃபர் வழங்க  ஜியோ திட்டம்

இந்தியாவில் தொலைத்தொடர்பு புரட்சியை ஏற்படுத்திய ஜியோ, கடந்த ஒரு வருடமாக பல்வேறு சலுகைகளை வழங்கி அதிரடி காட்டி வந்த நிலையில், அடுத்த அதிரடிக்கும் தயாராகிவிட்டது.
மொபைல் இண்டர்நெட்டை தொடர்ந்து பிராட்பேண்ட் சேவையை தொடங்க உள்ள ஜியோ, இந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் ஜியோ பைபர் வணிகச் சேவைகளை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.500/- என்ற விலை நிர்ணயத்தில் 100 ஜிபி அளவிலான டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மும்பை, டெல்லி - என்.சி.ஆர், அஹமதாபாத், ஜாம்நகர், சூரத் மற்றும் வதோதரா ஆகிய பகுதிகளில், ஜியோ பைபர் சோதனை முன்னோட்டம் என்ற பெயரில் பிராட்பேண்ட் சேவையை இலவசமாக வழங்க இருப்பதாக ஜியோ அறிவித்துள்ளது.
இந்த ஜியோ ஹோம் பிராட்பேண்ட் அல்லது பைபர்-டூ-தி-ஹோம் (FTTH) சேவையானது ஹோம் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தை அதாவது - ஸ்மார்ட்போன்கள் / டேப்ளெட்கள் மூலம் மின்னணு பொருட்கள் கட்டுப்படுத்த அனுமதிக்கும் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது. மேலும் இவை அனைத்தையும் பயனர்கள் அவர்களின் ஸ்மார்ட்போன்களின் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்

Comments