விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தால் பொருளாதாரம் சீர்குலையும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை மறு ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.25 சதவிகிதமாக தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்துக்குப்பின் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு முதலே பணவீக்கம் குறைந்து காணப்படுகிறது. ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்கு முன் இருந்தே பணவீக்கம் குறைந்து விட்டது. இதனால் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்தால், அது பொருளாதார சரிவை ஏற்படுத்தி, பொருளாதாரத்தை சீர்குலைத்துவிடும். எனவே, இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கவனமாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
பருவ மழை பொய்த்து கடும் வறட்சி நிலவுவதால், வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநரின் இந்த கருத்து விவசாயிகளை கோபப்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment