66 ஆயிரம் ரூபாயை சாப்பிட்ட ஆடு புலம்பிய விவசாயி
உத்திரபிரதேச மாநிலத்தில் வெள்ளாடு ஒன்று பசி காரணமாக 66 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சாப்பிட்டுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டம் சிலுவாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வேஸ் குமார் பால்.
விவசாயியான இவர் தன்னிடம் இருந்த 66 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தன்னுடைய பேன்ட் பாக்கெட்டில் வைத்துவிட்டு வீட்டுக்கு வெளியே குளித்துக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது, பசியோடு வந்த இவரது ஆடு, அந்த ரூபாய் நோட்டுகளை சாப்பிட்டு முடித்துள்ளது.
குளித்து முடித்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்த விவசாயி, ஆட்டினை வேகமாக விரட்டியுள்ளார், ஆனால் இரண்டு நோட்டுகள் மட்டுமே மிஞ்சியுள்ளது.
வீட்டின் கட்டுமானப்பணிகள் நடந்துகொண்டிருப்பதால் செங்கல் வாங்குவதற்காக வைத்திருந்த பணத்தை சாப்பிட்டுவிட்டதே என அந்த விவசாயி புலம்பியுள்ளார்
Comments
Post a Comment