சினிமாவில் நடிக்க சச்சினுக்கு ரூ.40 கோடி சம்பளம்?
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்க்கை சரித்திர படமான ‘சச்சின் ஏ பில்லியன் டிரீம்ஸ்’ நடித்தார். சமீபத்தில் இப்படம் திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் நடித்ததற்காக சச்சின் பெரும் தொகையை சம்பளமாக கேட்கிறாராம். சுமார் ரூ. 35 முதல் 40 கோடி தரவேண்டும் என்று பட தயாரிப்பு நிறுவனத்திடம் அவர் கேட்டதாக கூறப்படுகிறது. இதை பட தரப்பு மறுத்திருக்கிறது.
‘சச்சின் ஏ பில்லியன் டிரீம்ஸ் படத்தில் நடித்ததற்காக சச்சின் அதிக சம்பளம் கேட்பதாக வரும் தகவலில் உண்மை இல்லை. இப்படத்துக்கு சச்சின் உறுதுணையாக இருந்து முழுமூச்சுடன் உழைத்து கமர்ஷியல் ரீதியான படமாக உருவாக ஒத்துழைத்தார்’ என அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த ஆண்டு கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை வரலாறு படம் ‘எம்.எஸ்.டோனி : தி அன்டோல்டு ஸ்டோரி’ பெயரில் உருவானது. தனது வாழ்க்கை சரித்திரத்தை படமாக்குவதற்கான அனுமதி வழங்க ரூ.40 கோடியை டோனி பெற்றதாக கூறப்பட்டது. ஆனால் அவ்வளவு பெரிய தொகையை டோனிக்கு அளிக்கவில்லை என்று அன்றைய நாளில் பட தரப்பு தெரிவித்திருந்தது.
Comments
Post a Comment