இந்தியாவின் முதல் கனரக ராக்கெட்: துவங்குகிறது ஜிஎஸ்எல்வி மார்க் 3 ’கவுன்ட் டவுன்’ !

இந்தியாவின் முதல் கனரக ராக்கெட் துவங்குகிறது ஜிஎஸ்எல்வி மார்க் 3 ’கவுன்ட் டவுன்’ !

இந்தியாவின் முதல் கனரக ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட், இந்திய தொழில்நுட்பத்தில் புதிய சாதனை படைக்க ஜூன் 5-ம் தேதி விண்ணில் பாயவுள்ளது. இதற்கான ’கவுன்ட்டவுன்’ இன்று துவங்குகிறது.

இந்தியாவிலேயே முற்றிலுமாகத் தயாரிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்துக்கான அதிநவீன ஜிசாட்- 19 செயற்கைக்கோள் வின்ணில் பாய்வதற்காகத் தயாராகவுள்ளது. வருகிற ஜூன் 5-ஆம் தேதி இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டாவின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து புறப்படத் தயாராகும் ஜிசாட்-19, கவுன்ட்டவுன் இன்று தொடங்கவுள்ளது.
நான்காயிரம் கிலோ எடையுள்ள செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் திறனுடன் ஜிசாட்-19 வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரயோஜெனிக் இன்ஜின் மூலம் உருவான இந்தச் செயற்கைக்கோள் முற்றிலும் இந்தியத் தயாரிப்புகளால் உருவாக்கப்பட்டதாகும். இந்தச் செயற்கைக்கோளின் மொத்த எடை 3,136 கிலோ, இதில் 4,500 வாட்ஸ் திறன் கொண்ட சோலார் பேனல்கள், 2.0 மற்றும் 1.4 மீட்டரில் 2 வகையான ஆன்டனாக்கள், அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பத்து ஆண்டுகள் ஆயுள்காலம் கொண்ட ஜிசாட்-19 தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக ஜிஎஸ்எல்வி எம்கே 3 - டி1 ரக ராக்கெட் உடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
தற்போது விண்வெளியில் நிலைநிறுத்தப்படுவதற்கான இறுதிக்கட்ட தயாரிப்புகள் நடந்து வருகின்றன. இந்தச் செயற்கைக்கோளின் மூலம் இந்தியா புதியதொரு மைல்கல்லை எட்டும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Comments