வெளியீட்டிற்கு முன் 300,000 பேர் முன்பதிவு செய்த ஸ்மார்ட்போன்

வெளியீட்டிற்கு முன் 300,000 பேர் முன்பதிவு செய்த ஸ்மார்ட்போன்

இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்மார்ட்போன் வெளியீட்டிற்கு முன்பே 3,00,000-க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பீஜிங்:
ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ள ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 5 வெளியீட்டிற்கு முன்பே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. புதிய ஒன்பிளஸ் 5 முன்பதிவுகள் சீனாவின் JD.com தளத்தில் துவங்கப்பட்டதை தொடர்ந்து இதுவரை சுமார் 3,00,000-க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
சர்வதேச சந்தைகளில் புதிய ஒன்பிளஸ் 5 ஜூன் 20-ந்தேதி நடைபெறவுள்ளது. இந்தியாவில் ஒன்பிளஸ் 5 ஜூன் 22-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. முன்னதாக தலைசிறந்த சிறப்பம்சங்கள் மற்றும் சரியான விலையில் வெளியிடப்பட்ட ஒன்பிளஸ் 3 இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து புதிய ஒன்பிளஸ் 5 விலை இந்தியாவில் ரூ.32,999 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
புதிய ஒன்பிளஸ் 5 குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டுள்ளது. முன்னதாக இதே சிப்செட் சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டது. இத்துடன் புதிய ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரியும், 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 5 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

* 5.5 இன்ச் ஃபுல்-எச்டி 1080x1920 பிக்சல் டிஸ்ப்ளே
* 6 ஜிபி, 8 ஜிபி ரேம்
* 64 ஜிபி, 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 20 எம்பி, 16எம்பி டூயல் கேமரா அமைப்பு
* 16 எம்பி செல்ஃபி கேமரா
* 3000 எம்ஏஎச் பேட்டரி
* என்எஃப்சி, ப்ளூடூத் 5.0
சர்வதேச சந்தைகளில் புதிய ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனின் விலை 479 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.30,800 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனின் விலை ரூ.32,999 முதல் துவங்கும் என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் ரூ.37,999 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.

Comments