ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் 3வது முறையாக அத்துமீறி தாக்குதல்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், காஷ்மீர் எல்லையை ஒட்டிய பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 36 மணி நேரத்தில் 3வது முறையாக பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தினரின் இந்த தாக்குதலுக்கு, இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இரு தரப்பினரிடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றமும் நிலவி வருகிறது.
Comments
Post a Comment