விஐபி-2 படத்தின் டீசர்..!
வேல்ராஜ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'வேலையில்லா பட்டதாரி'. தனுஷ் நடிப்பில் வெளியான இந்தப் படம் அவருக்கு மாஸ் ஹிட் கொடுத்தது.
இதனையடுத்து, விஐபி படத்தின் இரண்டாம் பாகத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார். தனுஷுடன் இணைந்து இந்தப் படத்தில் கஜோல் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் 22 வருடங்களுக்குப் பின் கஜோல் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
சிறிது நாள்களுக்கு முன்பு இந்தப் படத்தின் போஸ்டர்ஸ் வெளியான நிலையில், படத்தின் டீசர் ஜூன் 7ஆம் தேதி வெளியாகும் என தனுஷ் சிறிது நாள்களுக்கு முன்பு ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அதேபோல், இன்று படத்தின் டீசரை அமிதாப் பச்சன் ட்விட்டரில் வெளியிட்டார். தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28 ஆம் தேதி படம் ரிலீஸாகயுள்ளது
Comments
Post a Comment