இந்தியாவில் மோட்டோ இசட் 2 பிளே வெளியானது விலை மற்றும் சிறப்பம்சங்கள்
லெனோவோவின் மோட்டோ இசட் 2 பிளே ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று துவங்கி ஜூன் 14 வரை நடைபெற்று, விற்பனை ஜூன் 15-ந்தேதி பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.
லெனோவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ இசட் 2 பிளே ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. மோட்டோ மாட்ஸ் சாதனங்களை சப்போர்ட் செய்யும் புதிய மோட்டோ இசட் 2 பிளே ஸ்மார்ட்போனின் முன்பதிவுகள் இன்று துவங்கி ஜூன் 14 வரை நடைபெறும் என்றும் விற்பனை ஜூன் 15-ந்தேதி பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.
இத்துடன் சமீபத்தில் அந்நிறுவனம் அறிமுகம் செய்த மோட்டோ மாட்ஸ்களையும் அறிவித்துள்ளது. எனினும் இவற்றின் விற்பனை குறித்து எவ்வித தகவலும் இடம்பெறவில்லை. இந்தியாவில் மோட்டோ இசட் 2 பிளே 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மோட்டோ இசட் 2 பிளே ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்வோருக்கு மோட்டோ ஆர்மர் பேக் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்படுகிறது. இதில் அலுமினியம் கேஸ், பேக் ஷெல், செல்ஃபி ஸ்டிக் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 100 ஜிபி 4ஜி டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.
மோட்டோ Z2 பிளே சிறப்பம்சங்கள்:
* 5.5 இன்ச் ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
* 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 626 ஆக்டாகோர் பிராசஸர்
* 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம்
* 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா, டூயல்-எல்இடி பிளாஷ்
* 3000 எம்ஏஎச் பேட்டரி
கனெக்டிவிட்டியை பொருத்த வரை 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2, யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, GPS/ A-GPS உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மோட்டோ மாட்ஸ் சாதனங்களுக்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது, இதனால் பழைய மோட்டோ மாட்ஸ்களும் புதிய ஸ்மார்ட்போனில் வேலை செய்யும்.
இந்தியாவில் மோட்டோ இசட் 2 பிளே விலை ரூ.27,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனினை வாடிக்கையாளர்கள் ரூ.2,000 செலுத்தி முன்பதிவு செய்து பின் வட்டியில்லா தவணை முறையில் 10 மாதங்களுக்கு பணம் செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. சர்வதேச சந்தைகளில் மோட்டோ இசட் 2 பிளே விலை 499 டார்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.32,200 என நிர்ணயம் செய்யப்பட்டது.
Comments
Post a Comment