ஜம்மு காஷ்மீரில் கடும் துப்பாக்கிச்சூடு 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபூர் பகுதியில் நடந்த பயங்கர சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாரமுல்லா மாவட்டம் நாதிபோரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இன்று அதிகாலை அந்த இடத்தைப் பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது.
Comments
Post a Comment