2 நாளில் 1 கோடியைத் தொட்ட 'விஐபி 2' டிரைலர்

2 நாளில் 1 கோடியைத் தொட்ட 'விஐபி 2' டிரைலர்
'விவேகம், மெர்சல்' ஆகிய படங்களின் டீசர், முதல் பார்வை ஆகியவற்றைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் 'விஐபி 2' அதிகம் பேசப்பட்டு வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு மும்பையில் இப்படத்தின் இசை மட்டும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
'விஐபி 2' படத்தின் டிரைலர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தனை நாட்களாக டிரைலர் என்றாலே யு டியுப் பார்வை சாதனைகளை மட்டுமே நமது ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கிலும் டிரைலர் வீடியோக்களை அதிகமாகப் பகிராமல் இருந்தார்கள். 'பாகுபலி 2' படத்தின் டிரைலர்களை ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்து அதிக பார்வைகளைப் பெற்றார்கள். அந்த வழியில் 'விஐபி 2' டிரைலரை தனுஷ் அவருடைய பேஸ்புக்கிலும் பகிர்ந்துள்ளார்.
தனுஷின் பேஸ்புக்கில் 'விஐபி 2' டிரைலர் 47 லட்சம் பார்வைகளையும், யு டியூபில் 37 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளது. 'விஐபி 2' தெலுங்கு டிரைலர் யு டியுபில் 20 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. மொத்தமாக டிஜிட்டல் வழியில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை 'விஐபி 2' டிரைலர் பெற்றுள்ளது. இனி, யு டியூப், ஃபேஸ்புக் இரண்டையும் சேர்த்து டிஜிட்டல் பார்வைகள் என புதிய அடையாளத்துடன் டீசர், டிரைலர் ஆகியவற்றின் சாதனைகளைப் பட்டியலிட ஆரம்பித்துவிடுவார்கள்.

Comments