மஹிந்திரா லாபம் 19% உயர்வு

மஹிந்திரா லாபம் 19% உயர்வு

ஆட்டோ மொபைல் துறையைச் சேர்ந்த மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் 4-ஆம் காலாண்டு நிகர லாபம் 19.93% அதிகரித்து ரூ. 725.16 கோடி ஈட்டியுள்ளதாக மும்பை பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்தது.
ஜனவரி-மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 12,319.64 கோடியாக இருந்தது. நிகர லாபம் முந்தைய ஆண்டு நிலையைக் காட்டிலும் 19.93% அதிகரித்து ரூ. 725.16 கோடியாக உள்ளது. அக்கால அளவில் விற்பனையான வாகனங்களின் எண்ணிக்கை 1,30,778 ஆகும். டிராக்டர் விற்பனை 13% அதிகரித்தது.
2016-2017 முழு நிதி ஆண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.48,438.53 கோடியாகும். நிகர லாபம் ரூ.3,955.65 கோடியாகும். பிஎஸ்-3 தரக்கட்டுப்பாடுக்கு உட்பட்ட வாகனங்களின் விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தடையால் நிறுவனத்தின் வருவாயில் ரூ. 171 கோடி அளவுக்குத் தாக்கம் ஏற்பட்டது என்று மும்பை பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் அந்நிறுவனம் தெரிவித்தது.

Comments