விவேகம் படப்பிடிப்பில் சில சுவாரசியங்கள்...
அஜித் நடித்து வரும் விவேகம் கிட்டத்தட்ட 70 % படப்பிடிப்புகள் நிறைவு பெற்றது. போஸ்டர், டீசர் என படம் பற்றிய பல விசயங்களை கேட்டிருப்பீர்கள். படப்பிடிப்பு சுவாரசியங்கள் உங்களுக்கு தெரியுமா..
இப்படபிடிப்பில் நடந்த சுவாரசியங்கள் :-
அனுமதி அளிக்கப்படாத பகுதிகளிலும் ஷூட்டிங் நடத்த ரிஸ்க் எடுத்து அனுமதி வாங்கியுள்ளார் சிவா. செர்பியா, பல்கேரியாவில் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்கள்.
மால் வாசலில் அஜித் உட்கார்ந்து வானத்தை பார்க்க சென்னையில் நான் இப்படி உட்காரமுடியுமா என கேட்டுள்ளார். இது அனவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.
படத்திற்காக உடை எடையை குறைப்பது அஜித்துக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது. முடிவில் உறுதியாக இருந்து தினமும் உடற்பயிற்சி செய்வாராம்.
அறுவைசிகிச்சைக்கு பிறகு டயட்டில் அசத்தல். அஜித்தின் உடல் எடைக்கு ஏற்றவாறு உடையையும் மாற்றம் செய்தார்களாம்.
வெளிநாட்டு உணவுகளை தவிர்த்து தான் கொண்டு சென்ற மினி கிச்சன் மூலம் தினமும் உணவு தயார் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து சாப்பிடுவாராம்.
ஒவ்வொரு நாளும் யூனிட்டில் இருக்கும் ஒவ்வொரு டீமில் இருப்பவர்கள் அத்தனை பேரிடமும் பேசி தன் நட்பு வட்டதிற்குள் அவர்களை கொண்டு வந்துவிடுவாராம்.
Comments
Post a Comment