திருமணத்தடை தோஷம் கழித்த அனுஷ்கா
அனுஷ்கா சினிமாவில் நடிக்க வந்து 10 வருடங்களாகி விட்டது. பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை அவருக்குப் பிடிக்காததால், திருமணம் செய்து கொள்ளும் திட்டம் நிறைவேறவில்லை. இப்போது பிரபாசுடன் சேர்த்து கிசுகிசுக்கப்படுகிறார். இந்நிலையில், திருமணத்தடை தோஷம் நீக்குவதற்காக கொல்லூர் மூகாம்பிகை மற்றும் மங்களூர் துர்கா பரமேஸ்வரி கோயிலுக்கு குடும்பத்துடன் நேற்றுமுன்தினம் சென்றார் அனுஷ்கா. கோயில்களில் தனக்கு இருக்கும் தோஷத்தை நிவர்த்தி செய்வதற்கான பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்த அவர், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளார்
Comments
Post a Comment