எரிமலையில் தேசிய கொடி சாதித்த இந்திய இளைஞர்

எரிமலையில் தேசிய கொடி சாதித்த இந்திய இளைஞர்

ஐதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்தோனேசியாவில் உள்ள எரிமலை ஒன்றில் இந்திய தேசிய கொடியை ஏற்றி சாதித்துள்ளார்.
பொதுவாக இமயமலையில் உள்ள எவரெஸ்ட் உள்ளிட்ட சிகரங்கள் மீது ஏருபவர்கள், தான் சார்ந்த நாட்டு தேசிய கொடியை பறக்கவிடுவது தான் வழக்கம். ஆனால், ஐதராபாத்தை சேர்ந்த சாய் தேஜா என்ற இளைஞர், இந்தோனேசியா நாட்டில் தீக்குழம்புகளை கக்கி கொண்டிருந்த டுகோனு என்ற எரிமலை பகுதிக்கு தைரியமாகச் சென்று அதனை வீடியோவில் பதிவு செய்ததுடன், எரிமலை அருகே சென்று இந்திய தேசிய கொடியையும் பறக்கவிட்டுள்ளார்.
அந்நாட்டு உள்ளூர் மக்களின் உதவியோடு இந்த சாதனையை நிகழ்த்திய சாய் தேஜா இது குறித்து கூறுகையில், ”வாழ்வில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்த தனக்கு இந்த பயணம் மனநிறைவை அளித்துள்ளது. மேலும் அடுத்து எந்த எரிமலைக்கு செல்லலாம் என ஆய்வு செய்து வருகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Comments