அஜித்திற்கு நற்பணி மன்றம் தொடங்கிய ஆர்.கே.சுரேஷ்..
தயாரிப்பாளராக இருந்து நடிகராக மாறியிருப்பவர் ஆர்.கே.சுரேஷ். இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக நடித்து இவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
இவர் தற்போது பில்லா பாண்டி மற்றும் வேட்டை நாய் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில், பில்லா பாண்டி படத்தில் அவர் தீவிர அஜித் ரசிகராக நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் அவர் எங்க குல தங்கம் அஜித் நற்பணி மன்றம் என எழுதப்பட்டிருக்கும் பனியனை அணிந்து கொண்டிருக்கிறார். அதேபோல், மற்றொரு புகைப்படத்தில் அவரது தோள்பட்டையில், அஜீத் உருவம் பச்சை குத்தப்பட்டுள்ளது.
எனவே, இதில் அவர் அஜித்திற்கு நற்பணி மன்றம் வைத்திருக்கும் ரசிகராக நடிக்கிறார் எனத் தெரிகிறது.
Comments
Post a Comment