கணினி முடக்கம் உலகெங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவைகள் பாதிப்பு
பிரிட்டிஷ் ஏர்வேஸின் கணினி சேமிப்பகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட திடீர் கோளாறால் உலகம் முழுவதும் அதன் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
உலகின் முன்னணி விமான சேவை நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸின் கணினி சேமிப்பகம் சனிக்கிழமை திடீரென முடங்கியது. இதைத் தொடர்ந்து, லண்டன் ஹீத்ரூ, காட்விக் மற்றும் பெல்
ஃபாஸ்ட் விமான நிலையங்களிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் புறப்பட முடியாமல் நிறுத்தப்பட்டன. அந்த விமானங்களிலிருந்த பயணிகள் வெளியேற அனுமதிக்கப்படாததால் பல மணி நேரம் அவர்கள் விமானங்களிலேயே இருந்தனர்.
பிரிட்டன் மட்டுமல்லாமல், உலகின் பல பாகங்களிலும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. கணினி முடக்கத்தால் விமானங்களின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது. விமானத்தில் இருந்தவர்கள் வெளியேற அனுமதிக்கப்படவில்லை. விமானங்களில் ஏறத் தயாராக இருந்த பயணிகள் காத்திருக்கும்படிக் கூறப்பட்டனர். அவர்கள் விமான நிலையத்தைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை.
கணினி முடக்கத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. கோளாறை சரி செய்ய அனைத்துவித நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகக் கூறிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கோரியது
Comments
Post a Comment