நாடு முழுவதும் மாட்டு இறைச்சிக்கு தடை மத்திய அரசின் அதிரட

நாடு முழுவதும் மாட்டு இறைச்சிக்கு தடை மத்திய அரசின் அதிரடி

பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டு வருவம் நிலையில், நாடு முழுவதும் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மிருக வதைக்கு எதிராக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி எருமை, பசு, ஒட்டகம், காளை உள்ளிட்டவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, விவசாயிகள் மட்டும் மாடுகளை சந்தைகளில் விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சந்தைகளில் மாடுகளை விற்பனை செய்பவர்கள் எழுத்துப்பூர்வமாக இதற்கான உறுதியை அளிக்க வேண்டும். மாட்டுச் சந்தை கமிட்டியும் மாடு விற்பனை செய்வது இறைச்சிக்காக அல்ல, விவசாய தேவைக்கு தான் என்பதை உறுதி செய்ய வேண்டும், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments