மோடி குறித்த அதிர்ச்சி போன் கால்

மோடி குறித்த அதிர்ச்சி போன் கால்

மும்பையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடியை கொன்றால், 50 கோடி ரூபாய் பரிசு அளிக்க தயார் என போன் மூலம் தெரிவித்த பாக்., ஆசாமியை மத்திய பிரதேச போலீசார் தேடி வருகின்றனர்.
ம.பி., மாநிலம், சாத்னா பகுதியை சேர்ந்தவர் குஷால் சோனி. இவருக்கு, +79651219 என்ற எண்ணில் இருந்து சில நாட்களுக்கு முன் ஒருவர் அழைத்துள்ளார். ' நான் பாகிஸ்தானில் இருந்து பேசுகிறேன். மும்பை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடியை கொல்ல, ஏற்கனவே இரண்டு பேரை தேர்வு செய்துள்ளோம். மூன்றாவது நபரை தேடி வருகிறோம். நீங்கள் தயார் என்றால், 50 கோடி ரூபாய் வரை தர தயார்' என, அந்த ஆசாமி கூறியுள்ளார். இது குறித்து சாத்னா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த போன் கால், கசகஸ்தான் நாட்டில் இருந்து வந்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Comments