படத்தில் நடிக்க போய் நிஜமாகவே சூரிக்கு நேர்ந்த கொடுமை! வீடியோ

படத்தில் நடிக்க போய் நிஜமாகவே சூரிக்கு நேர்ந்த கொடுமை! வீடியோ
நடிகர் சூரி இன்று டாப் காமெடி நட்சத்திரமாக கலக்கி கொண்டு வருகிறார். பல படங்களில் தொடர்ந்து கமிட்டாகி வரும் சூரிக்கு ஒவ்வொரு படமும் ஒரு அடைமொழியை பெயருக்கு முன்னால் சேர்த்து விடுகிறது.
அட்லீ தயாரிப்பில் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் வெற்றி விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய சூரி ஷூட்டிங் நாட்களில் நடந்த விசயங்களை பகிர்ந்து கொண்டார்.
ஒரு காட்சியில் நாய் விரட்டுவது போலவும், அதிலிருந்து தப்பித்து ஓடுவது போலவும் இருக்குமாம். ஆனால் இதில் நடிக்கும் போது ஒன்றிரண்டு நாய்கள் மட்டும்மில்லாமல் கணக்கில் வராத பல நாய்கள் ஒன்று கூட விரட்ட ஆரம்பித்ததாம்.
ஒரு கட்டத்தில் சூரி பயந்துபோய் ஒரு மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டாராம். ஜீவா ஒரு காருக்குள் சென்று பதுங்கி விட்டாராம். இதை சூரி தன் ஸ்டைலில் சொல்ல அங்கிருந்தவர்களுக்கு ஒரே சிரிப்பு தான்.

Comments