திருமணத்துக்கு பிறகும் கவர்ச்சியை தொடரும் சமந்தா குடும்பத்தினர் அதிர்ச்சி

திருமணத்துக்கு பிறகும் கவர்ச்சியை தொடரும் சமந்தா குடும்பத்தினர் அதிர்ச்சி.....

சமந்தா, நாக சைதன்யா திருமணம் வரும் அக்டோபர் 6ம் தேதி நடத்துவதுபற்றி இருகுடும்பத்தாரும் பேசி வருகின்றனர். வெளிநாட்டில் நடத்துவதா? ஐதராபாத்திலேயே நடத்துவதா? என்பதுபற்றியும் ஆலோசிக்கின்றனர். திருமணத்தையொட்டி 3 மாத விடுமுறை எடுக்க சமந்தா எண்ணியுள்ளதாக தகவல் பரவினாலும் அவ்வளவு நீண்ட விடுமுறை எடுக்க அவருக்கு நேரமிருக்காது. தொடர்ச்சியாக அவர் படங்களை ஒப்புக்கொண்டிருப்பதால் அதில் நடிக்க வேண்டி உள்ளது என்று ஒரு தரப்பு கூறுகிறது.
திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்க சமந்தா முடிவு செய்திருக்கிறார். ஆனால் கிளாமர் வேடங்களை ஏற்க மாட்டார் என்று கோலிவுட்டில் தகவல் பரவியது. இதை உடைக்கும் விதமாக அதிரடி கவர்ச்சி போஸ் தந்து அசத்தியிருக்கிறார். கைத்தறி ஆடைகளின் தூதராகவும் சமந்தா பொறுப்பு ஏற்றிருக்கிறார்.
இந்த ஆடைகளில் கவர்ச்சிக்கு இடமிருக்காது என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களின் எண்ணத்தையும் மாற்றும் வகையில் கைத்தறியில் தயாரிக்கப்பட்ட கிக்கான உடையில் சமந்தா அளித்திருக்கும் போஸ் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதேநேரத்தில் சைதன்யா குடும்பத்தினருக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது

Comments