உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க ஐபோன் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு வரிச்சலுகை

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க ஐபோன் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு வரிச்சலுகை

ஆப்பிள் நிறுவனம் சில உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய அனுமதி தருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக பெங்களூருவில் ஐபோன் உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் துவக்க மாடலான ஐபோன் எஸ்இ 4 அங்குல திரை கொண்டது. முதல் கட்டமாக இந்த மாடல் உற்பத்தி செய்யப்பட்டு இம்மாத இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியானது. இருப்பினும் இந்த ‘இந்திய தயாரிப்பு’ ஐபோன் உற்பத்தி கடந்த வாரம்தான் துவங்கியுள்ளது என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு சலுகைகளை ஆப்பிள் நிறுவனம் கோரி வருகிறது.
இதுகுறித்து, மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் அருணா சுந்தரராஜன் கூறியதாவது: இந்தியாவில் உடனடியாக உற்பத்தி செய்ய முடியாத உதிரி பாகங்கள் பட்டியலை ஆப்பிள் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. எனவே, இவற்றை மட்டும் முழு வரிச்சலுகையுடன் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இரு தரப்பிலும் உள்ள சூழ்நிலைகளை கொண்டு இந்த முடிவு இறுதி செய்யப்பட இருக்கிறது. தற்போது இந்தியாவில் தயாரிக்க முடியாத சில மின்னணு பொருட்கள் வரிச்சலுகையுடன் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே, இந்தியாவில் தற்போதைக்கு தயாரிக்க முடியாத ஐபோன் உதிரிபாகங்களை வரிச்சலுகையுடன் ஆப்பிள் நிறுவனம் இறக்குமதி செய்ய முடியும் என்றார்.

Comments