பிறந்து சில மணிநேரங்களிலேயே நடக்க துடிக்கும் அதிசய குழந்தை!
பிரேசில் பச்சிளம் குழந்தை ஒன்று செவிலியரின் கையை பிடித்துக்கொண்டு நடக்கும் அதிசய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பிரேசிலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் எடுக்கப்பட்ட இந்த காட்சிகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக ஒரு குழந்தை பிறந்து சில மாதங்கள் கழித்துதான் தவழ ஆரம்பிக்கும்.
பின்பு கொஞ்ச நாட்களுக்கு பிறகு உட்காரத்தொடங்கி, பின்புதான் படிப்படியாக நடக்க ஆரம்பிக்கும். ஆனால், பிரேசிலில் குழந்தை ஒன்று பிறந்து சில மணிநேரங்களிலேயே செவிலியரின் உதவியுடன் நடக்கப்பழகியுள்ளது. நர்ஸ் ஒருவர் தன்னுடைய கைகளில் குழந்தையை தாங்கி பிடிக்க, தன்னுடைய பிஞ்சு கால்களால் அக்குழந்தை நடக்க பழகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.
Comments
Post a Comment