வடகொரியாவுக்கு பதிலடி ஏவுகணை எதிர்ப்பு சோதனை நடத்தியது அமெரிக்கா
கலிபோர்னியா: கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வரும் வேலையில் வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா ஏவுகணை எதிர்ப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தி உள்ளது. உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா அணு ஆயுதம் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தொடர்ச்சியாக சோதனை செய்து வருகிறது. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் வடகொரியாவை சமாளிக்கும் விதமாக ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் பாதுகாப்பு பரிசோதனையை அமெரிக்கா நடத்தி உள்ளது. கலிபோர்னியாவில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் போது பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவில் இருந்து ஏவப்பட்ட மாதிரி ஏவுகணை இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டது. இந்த பாதுகாப்பு பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்றது அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் பாதுகாப்பு அமைப்பு சோதனையை அமெரிக்கா முதன்முறையாக சோதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment